நாடாளுமன்ற தேர்தலை முன் கூட்டி நடாத்துவதற்கு மக்கள் அபிப்பிராயம் அறிய முற்படும் நாடகத்தைக் கைவிட்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்தியாக வேண்டும் என தெரிவிக்கின்ற சம்பிக்க அதனை பின் போட அனுமதிக்கப் போவதில்லையென சூளுரைத்துள்ளார்.
ஒக்டோபர் 10ம் திகதியளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கோரப்பட வேண்டும் என தெரிவிக்கின்ற அவர், சட்டரீதியாக எவ்வித பாதிப்பையும் செலுத்த முடியாத கருத்துக் கணிப்புகளை நடாத்துதல் வீண் விரயம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெரமுன தரப்பும் இவ்வாறான ஒரு கருத்துக் கணிப்பு அவசியமற்றது என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment