மாகந்துரே மதுஷோடு டுபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்டிருந்த கஞ்சிபானை இம்ரான் என அறியப்படும் பாதாள உலக பேர்வழியைத் தொடர்ந்தும் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்திய நிலையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல பாதாள உலக பேர்வழிகள் கைதான போதிலும் கஞ்சிபானை இம்ரான் தொடர்பிலேயே ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment