தெஹிவளை பகுதியில் இயங்கும் மத்ரசா ஒன்றுக்கு எதிராக அக்மீமன தயாரத்ன தேரரின் தூண்டுதலில் நாளைய தினம் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முஸ்லிம்கள் மீதான அழுத்தத்தை மீண்டும் அதிகரிக்கும் பொருட்டு கடும்போக்குவாதிகள் தொடர்ந்தும் முயற்சி செய்து வரும் நிலையில் இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், பொலிசார் நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்றுள்ளதோடு பல முனைகளிலிருந்து முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment