நிலத்தின் கீழ் 80 அடி வரையில் ஸ்கேன் செய்யக் கூடிய இயந்திரம் ஒன்றுடன் சஹ்ரானின் சகா என நம்பப்படும் நபர் ஒருவரை கடுபொதயில் கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததாக தெரிவிக்கும் பொலிசார், குறித்த இயந்திரம் வைத்திருந்ததன் பின்னணியில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி கைது செய்துள்ளதாக அறியமுடிகிறது.
இதேவேளை, இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஐ.எஸ். உட்பட்ட தீவிரவாத குழு முற்றாக அடக்கப்பட்டு விட்டதாக அண்மையில் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment