ஈஸ்டர் தினத்தன்று ஏனைய இடங்களில் தற்கொலைதாரிகள் தாக்குதலை நடாத்திய போதிலும் தாஜ் சமுத்ராவில் குண்டு வெடிக்காமைக்குக் காரணமுண்டு என தெரிவிக்கிறார் ஸ்ரீலசுக செயலாளர் தயாசிறி ஜயசேகர.
அன்றைய தினம் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் யார்? என தேடிப் பார்த்தால் அதற்கான விடை கிடைக்கும் எனவும் அவர் தெரிவிக்கிறார். குறித்த காரணத்திற்காகவே அங்கு நடாத்தப்பட வேண்டிய தாக்குதல் கைவிடப்பட்டதாக தயாசிறி தெரிவிக்கின்றார்.
இந்நிலையில், தாக்குதல்தாரி அங்கிருந்து சென்று தெஹிவளையில் தாக்குதலை நடாத்தி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment