கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துக் கொண்ட தயாசிறி ஜயசேகரவை மீண்டும் அழைத்து விசாரணை நடாத்தப்படும் என தெரிவிக்கிறார் தெரிவுக்குழு தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி.
எனினும, தான் விசாரணைக்கு சமூகமளிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர.
தெரிவுக்குழு விசாரணைக்கு சமூகமளிப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையென குமாரசிறி தெரிவிக்கின்ற அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலன்று தாஜ் சமுத்ராவில் தாக்குதல் இடம்பெறாமைக்குக் காரணம் அங்கு 'முக்கிய' நபர் ஒருவர் இருந்தமையென தயாசிறி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment