முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியை ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றி விசாரணை நடாத்திக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தெரிவிக்குழு முன் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 11ம் திகதி பி.ப 2 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏலவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் அக்காலப் பகுதியில் மேல் மாகாண ஆளுனராக இருந்ததன் அடிப்படையில் அரசாங்கம் தாக்குதலை தவிர்க்கத் தவறியது தொடர்பாகவே இவ்விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, தீவிரவாத குற்றச்சாட்டுகள் இருப்பின் அதனை விசாரிக்க வழி விடும் முகமாகவே ஆளுனர்கள் அசாத் சாலி, ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சுப்பதவி வகித்த ஒன்பது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment