பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 18ம் திகதி நாடாளுமன்றில் கூடி, மீண்டும் பதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் ஹலீம்.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர்கள், அமைச்சுப் பொறுப்புகளை வகித்த 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
இதன் பின்னணியில் சர்வதேச அழுத்தம் உருவாகி வந்த நிலையில் மகா சங்க நாயக்கர்கள் முஸ்லிம்கள் மீண்டும் பதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது , முன்னர் வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசத்துக்கு முன்பாகவே பதவிகளை மீளப் பெறுவது குறித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment