முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக ரதன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்தினையடுத்து நாடளாவிய ரீதியில் முஸ்லிம் அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று இரு முஸ்லிம் ஆளுனர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளதோடு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் அவசரமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் பின்னர், அமைச்சு பதவிகளை வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாமும் இராஜினாமா செய்யப் போவதாக 'தெரிவித்து' பிரதமரை சந்திக்க அலரி மாளிகை சென்றுள்ளதாக அறியமுடிகிறது. எனினும், இது தொடர்பில் (இதுவரை) இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
1 comment:
இன்ஷா அல்லாஹ் இதை அப்படி செய்வதன் மூலம் தான் முஸ்லிம்களின் பலத்தையும் அவர்களுக்கு தெரிவிக்க முடியும்.
Post a Comment