கிணற்றுத் தவளையாக இருப்பதை விட்டும் விமல் வீரவன்ச வெளி வர வேண்டும் என தெரிவிக்கிறார் அமைச்சர் மங்கள சமரவீர.
அரசு மேற்கொள்ளும் சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் விமல் வீரவன்சவுக்கு எவ்வித புரிதலும் இல்லாத நிலையில் விசமக் கருத்துக்கள் பரப்புவதை நிறுத்தி விட்டு, நேரடியாகத் தொடர்பு கொண்டால் ஒப்பந்தங்களின் பிரதிகளைக் காண்பித்து விளக்கம் தர முடியும் எனவும் தெரிவிக்கின்ற மங்கள, விமலுக்குத் தன்னை நேரில் சந்திப்பதில் பிரச்சினை இருக்கப் போவதில்லையெனவும் ஒரு காலத்தில் தன்னை அவ்வப் போது சந்தித்து தன்னோடு சகஜமாக குடித்து, காட்டுப் பன்றி இறைச்சி சாப்பிடும் வழக்கம் இருந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த அணியின் முக்கிய பேச்சாளராக இருக்கும் விமல் வீரவன்ச, பெரமுன ஊடாக தனது கட்சியை வளர்த்துக்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment