ஹிஸ்புல்லாஹ்வின் கல்வி நிறுவனத்தை அபகரிக்க முடியும்: சிசிர - sonakar.com

Post Top Ad

Sunday, 23 June 2019

ஹிஸ்புல்லாஹ்வின் கல்வி நிறுவனத்தை அபகரிக்க முடியும்: சிசிர


அவசரகால சட்டத்தின் கீழ் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வினால் மட்டக்களப்பு கம்பஸ் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தைக் கைப்பற்ற முடியும் என தெரிவிக்கிறார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்பார்வைக் குழுவின் உறுப்பினருமான சிசிர ஜயகொடி.


அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இது தொடர்பில் மேலதிக பேச்சுவார்த்தைகள் அவசியமில்லையென அவர் தெரிவிக்கிறார்.

எனினும், அரசுக்கு அதற்கான உரிமையில்லையென தெரிவிக்கின்ற முன்னாள் ஆளுனர், தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment