தான் சுகாதார அமைச்சராக இருக்கும் வரை வெளிநாட்டு சிகரட்டுகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இலங்கையில் தொழில்புரியும் சீனர்களை கருத்திற்கொண்டு சீன சிகரட்டுகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என மங்கள சமரவீர தெரிவித்த கருத்தையும் நிராகரித்துள்ள ராஜித, 6000 சீனர்களே இலங்கையில் தொழில்புரிவதாகவும் அவர்களுக்காக விதியைத் தளர்த்தினால் 10,000 இந்தியர்களுக்காக இந்திய சிகரட் மற்றும் ரஷ்ய சிகரட்டுகளையும் அனுமதிக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தான் சுகாதார அமைச்சராக இருக்கும் வரை வெளிநாட்டு சிகரட்டுகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லையென அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment