பத்திரிகைத் துறையில் இரண்டறக் கலந்து 50 வருடங்களுக்கு மேலாக பிராந்திய செய்தியாளராக பொறுப்புணர்வுடன் கடமையாற்றி கண்டியில் மூவின மக்கள் மத்தியில் தம் பெயரைப் பதிவு செய்த பத்திரிகையாளர் க. ப சிவம் அவர்களுடைய மரணம் கண்டிக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று முன்னாள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
வீரகேசரி கண்டிப் பிராந்திய செய்தியாளரும் , மலைமுரசு சஞ்சிகையின் ஆசிரியருமான க. ப. சிவம் அவர்களின் மரணம தொடர்பாக முன்னான் எம் எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மத்திய மாகாண சபையின் உறுப்பினராகவும் அதில் அமைச்சராகவும் நீண்ட காலம் சேவையாற்ற கால கட்டத்திலும் பாராளுமன்றம் முதல் இறுதியாக அமைச்சராக இருந்த காலம் வரையிலும் என்னுடைய அரசியல் சமூகப் பணிகளுக்குப் பங்களிப்பு நல்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பேச்சாளராக செயற்பட்டவர் 1958 களில் முத்தமிழ் மன்றம் ஆரம்பித்து செயற்பட்டவர். மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் இளைஞர்களின் தலைபதியாகப் போற்றப்பட்டவர். 1960 களில் மலைமுரசு சஞ்சிகையை வெளியிட்டு மலையக எழுத்தாளர்களுக்கு நீண்ட காலமாக களம் அமைத்துக் கொடுத்தார். பின்னர் 1987 களில் அதன் பெயரில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் ஊடகவியலாளர் இக்பால் அலியினை உதவி ஆசிரியராகக் கொண்டு மீளவும் ரோணியோ சஞ்சிகையாக வெளிக்கொணர்ந்தவர். 1965 முதல் 1975 வரையிலும் நாடகங்கள் தயாரித்து மேடையேற்றி வெற்றிகண்டவர். 1997 அரச சாஹித்திய விழாவில் தமிழ் மொழி மணிப்பட்டம் வழங்கி கௌரவிக்கபபட்டவர்.
தரமான மூத்த பத்திரிகையாளரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே அதிகம் செல்வாக்குப் பெற்றவருமான க. ப. சிவம் தம் 87 வயதில் மரணம் எய்தியதையிட்டு நான் ஆழ்ந்து துக்கம் கவலையும் அடைகின்றேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவரது பிரிவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினர்களுக்கு நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment