அல்-குர்ஆனில் எந்த உயிரையும் கொல்லச் சொல்லவில்லை: சேனரத்ன நாஹிமி - sonakar.com

Post Top Ad

Sunday, 30 June 2019

அல்-குர்ஆனில் எந்த உயிரையும் கொல்லச் சொல்லவில்லை: சேனரத்ன நாஹிமி


அல்குர்ஆன் என்பது பரிசுத்தமானது புனிதத் தன்மை வாய்ந்தது, நேர்மைத் தன்மைவாய்ந்தது. உண்மைத் தன்மை வாய்ந்தது. அதில் உயிரைக் கொல்லவோ கழுத்தை வெட்டவோ சொல்லவில்லை அஸ்கிரி விஹாரையின் உயர் பீட உறுப்பினரும் , கண்டி சுதுஹும்பொல  ரஜமஹா விஹாராதிபதி  சேனாத சேனரத்ன யோகி நாஹிமி தெரிவித்தார்.



கண்டி கட்டுக்கலை ஜம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சர்வமத சகழ்வாழ்வு தொடர்பான விசேட நிகழ்வு பள்ளிவாசல் தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், நான்  ஒரு போதும் பள்ளிவாசலுக்கு வந்ததில்லை. வந்ததிற்குப் பிறகு எனக்கு சந்தோசம் ஏற்பட்டது இதைப் பார்க்க வேண்டும் என்று.  என்ன நடக்கிறது என்கின்ற உண்மைத் தன்மையைச் சொல்ல வேண்டும்.  இது பற்றித் தெரியாத காரணத்தனால் ஒவ்வொருவடைய மருந்துகளுக்கு  ஏற்ப பிரிவினைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் குர்ஆனில்  என்ன இருக்கிறது என்று படிக்க வேண்டும்  என்ற ஆவல் எனக்கு நீண்ட காலமாக  இருந்தது. மௌலவி ஒருவர் மிகுந்த இரக்கத்துடன் அதனைக் கொண்டு வந்து தந்தார். இரு வாரங்களாக அந்த குர்ஆனை வாசிக்க ஆரம்பித்தேன். எனினும் அந்த குர்ஆனை வாசிக்கும் போது எனக்கு தெரியாத விடயங்கள் தொடர்பாகவும் உண்மையிலேயே  எங்களால்; உருவாக்க முடியாதளவுக்கு எமது  சிறப்பான வாழ்க்கை அம்சம் அதில் காணக் கூடியதாக இருக்கிறது. 

அது ஒரு புதுமையாக இருந்தது. என்னவென்றால் இதுவரையிலும் நாங்கள் இஸ்லாம் பற்றி அம்சங்களை தெளிவில்லாமல் விளங்கிக் கொண்டிருந்துள்ளோம். எனினும் அது ஒரு அதிஷ்டவசமானது குர்ஆனில் முஸ்லிம்கள்  பிழையற்றவர்கள் பரிசுத்தமானவர்கள். உண்மைத் தன்மை வாய்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. நாங்கள் இதுரையிலும் மாடுகளைக் கொல்லுபவர்கள்.  கோழிகளைக் கொல்லுபவர்கள், ஆடுகளை கொல்லுபவர்கள் என்றுதான் தெரிந்து இருந்தோம்.  ஆனால் அல் குர்ஆனைப் படித்த பின்னர்தான் மிகவும் உண்மைத் தன்மை வாய்ந்தவர்கள் பரிசுத்தமானவர்கள்,  நேர்மைத் தன்மை வாய்ந்தவர்கள் முஸ்லிம்கள் .ஆனால் நாங்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். நாங்கள் சரியான முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

இந் நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில்  இடம்பெற்ற சம்பவத்தில்  முழு இலங்கையும் பாதிக்கப்பட்டது. கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்ல நாட்டிலுள்ள எல்லாயின மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் குர்ஆனில்  உயிரைக் கொள்ளவோ கழுத்தை வெட்டவோ சொல்ல வில்லை .எனினும்  இதற்குள் சர்வதேச தீவிரவதச் சக்திகள் எப்படி ஊடுருவி இருக்க வேண்டும். 

அல்லாஹ்வின் உதவியால் அந்த நிலையில் இருந்து காப்பற்றப்பட்டுள்ளோம். இது நாடளாவிய ரீதியில் நடந்திருக்குமாயின் பாரிய விபரீதங்கள்  ஏற்பட்டிருக்கலாம். ஏன் இவ்வளவு வாள்கள் கொண்டு வந்தனர்.  ஏன் துவக்குகள் கொண்டு வந்தனர், ஏன் இவ்வளவு இராணுவ சீருடைகள் கண்டு பிடிக்கப்பட்டன.  எனினும் குர்ஆனில் ஒரு போதும் கூறவில்லை அடுத்தவர்களுடைய உயிரை மாய்க்கவோ உயிரைக் கொள்ளவோ சொல்லவில்லை. நபி நாயகம் (ஸல்) அவர்கள்  காலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுடன் மிகவும் நேசமான உறவுகளைப் பேணி புதிய முறையில் வாழ்ந்து காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் எமக்குகிடையே சிறு சிறு இன முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இல்லை என்று சொல்லமுடியாது. இதுவரை காலமும் நாங்கள் ஒற்றுமையாகத் தான் வாழ்ந்து வந்தோம். ;தொடர்ந்து  மீண்டும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் பேணி ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் விசேட தினமான வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் இதில் இடம்பெறும் மார்க்கச் சொற்பொழிவையும் வணக்க வழிபாட்டையும் நேரில் கண்டு களிப்பதற்காக பௌத்த சமயத் தலைவர்கள், சிங்கள, தமிழ்  வர்த்தகப் பிரமுகர்கள், கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் மார்க்கச் சொற்பொழிவை மௌலவி அம்ஹர் ஹக்கம்தீன் நிகழ்த்தினார். சுதுஹும்பொல அனுநாயக தேரர் தம்ம சித்தி , கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக், அகில இலங்கை வை. எம். எம். ஏ. இயக்கத்தின் பொதுச் செயலாளர் சஹீட்.எம். ரிஷ்மி,  உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இதில் இந்நாட்டின் ஒற்றுமைக்காகவும் சக வாழ்வை கட்டி எழுப்புதவற்கான நல்லாசி வேண்டி பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

-இக்பால் அலி



No comments:

Post a Comment