கல்முனையில் ரதன - சுமன தேரர்கள் மற்றும் வியாழேந்திரன்! - sonakar.com

Post Top Ad

Thursday, 20 June 2019

கல்முனையில் ரதன - சுமன தேரர்கள் மற்றும் வியாழேந்திரன்!


கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துராலியே ரதன தேரர், மட்டக்களப்பு சர்ச்சைத் துறவி அம்பிட்டியே சுமன தேரர் மற்றும் வியாழேந்திரன் நேரில் சென்றுள்ளனர்.



சர்ச்சைக்குள்ளாகியுள்ள குறித்த அலுவலகம், ஆயுத போராட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட தற்காலிக அலுவலகம் எனவும் அது தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருக்கையில் இவ்வாறு ஒரு சத்தியாக்கிரகம் அவசியமற்றது எனவும் கோரி கல்முனையில் முஸ்லிம் சமூகத்தவர்கள் கலந்து கொள்ளும் மேலும் ஒரு சத்தியாக்கிரகமும் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையிலேயே இனவாதத்தை தூண்டும் பின்னணி கொண்ட நபர்கள் அங்கு சென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment