பொது நிருவாகம் மற்றும் அனர்த்து முகாதை;துவ அமைச்சினால் அரசாங்க அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் முதலாவதாகவும் நான்காவதாகவும் ஐந்தாவதாகவும் குறிப்பிடப்படும் விடயங்களில் ஒரு தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. எனவே இது தொடாபாக முஸ்லிம்கள் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக சீர் செய்து எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை மேற் கொள்ளவுள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
இந்தப் பாதுகாப்பு சுற்றறிக்கை விடயம் தொடர்பாக முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பொது நிருவாகம் மற்றும் அனர்த்து முகாமைத்துவ அமைச்சினால் அரசாங்க அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் தொடர்பாக வெளியிட்டுள்ள தெளிவற்ற சுற்றறிக்கையினால் அரச அலுவலகங்களில் கடமைபுரியும முஸ்லிம் பெண் உத்தியோகஸ்தர்களும் மற்றும் சேவை நலனைப் பெற்றுக் கொள்வதற்காக அரச அலுலவகங்களுக்குச் செல்லவுள்ள பெண்கள் பெரும் குழப்ப நிலையில் உள்ளனர். இந்த தெளிவற்ற சுற்றறிகையின் மூலம்; எதிர்காலத்தில் அசௌரியங்களை எதிர்நோக்க நேரிடுமோ என்கின்ற சந்தேகம் அவர்களிடத்தில் எழுந்துள்ளன.
இந்த சுற்றறிகை;கை தொடர்பாக உரிய அமைச்சருடன் தொடர்பு கொண்டு கதைத்துள்ளதுடன் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவுடன் கதைத்து இந்த விடயங்களைத் திருத்தயமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக அரசாங்க உத்தியோகஸ்தர்களின் சீருடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வரும் சேவை பெறுநர்களின் ஆடை அணிகலன் தொடர்பில் பின்வரும் ஏற்பாடுகளைப் பின்பற்றுதல் வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் முதலாவது அறிக்கையில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கடமை நேரத்தினுள் தமது அலுவலக வளாகத்திற்குவரும் போது பெண் உத்தியோகஸ்தர்கள் சேலை அல்லது கண்டிய சேலை ( ஒசரி ) அணிந்திருத்தல் வேணடும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது அதேவேளை அதற்கு இணங்க நான்காவது அறிக்கையில் ஏதேனும் சமய மரபுககு இணங்க தமது உடைகளை அமைத்துக் கொண்டுள்ள உத்தியோகஸ்தர்கள் யாவரும் இருப்பின், அவர்கள் மேலே ஒன்றில் உள்ளவாறான உடையை அணிந்து அதன் பின்னர் அந்த சமய அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும் உத்தியோகஸ்தர்களினால் முழு முகத்தையும் தெளிவாக அடையாளம் காணக் கூடிய விதத்திலும் மேலதிக ஆடை அணிகலன் ஒன்றைப் பயன்படுத்த முடியும். என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையிலும் அபாயா அணிந்து செல்பவர்களே உள்ளனர். மேலதிக ஆடை அணிகலன் என்ற விடயத்தில் தெளிவற்றை தன்மை காணப்படுகின்றது.
மேலும் ஐந்தாவது அறிக்கையில் சேவை பெறுநராக அரசாங்கத்துக்குச் சொந்தமான வளவுக்குள் நுழையும் போது அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளைப் பெறுவதற்கு வருகை தரும் போது ஒவ்வொரு ஆளும் தம்மை தெளிவாக அடையாளம் காட்டக் கூடிய முறையிலான ஆடையொன்றை அணிந்து வர வேண்டும் என்று ஏற்பாடுகளை விதிப்பதற்கு அனைத்து நிறுவனங்களினதும் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
விசேடமாக முஸ்லிம் பெண்கள் தொடர்பாக இந்த சுற்றறிக்கையில் ஒரு தெளிவற்ற தன்;மை காணப்படுகின்றது. எனவே இது தொடர்பாக ஒரு திருப்திகரமான அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment