உம்மத்தின் நலனே முக்கியம் எனும் அடிப்படையில் பதவியில் இருப்பதும் இல்லாததும் முக்கியத்துவம் இல்லாதவொரு விடயம் என தெரிவிக்கிறார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.
இன்று அதிகாலையில் வெலிகமயில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் தற்சமயம் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழ்நிலை குறித்து சோனகர்.கொம் வினவிய போது கருத்துரைத்த ஆளுனர், மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் இன்றைய தினம் இடம்பெறுவதாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பில் வைத்து தீர்க்கமான முடிவொன்றை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
பதவிகளுக்கு அப்பால் அரசுக்கு அழுத்தம் ஒன்றைக் கொடுக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக முடிவெடுப்பார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவரது உரையாடலை செவி மடுக்க:
No comments:
Post a Comment