ரிசாத் பதியுதீனுக்கு எதிராக 80 சாட்சிகளுடன் 16 குற்றச்சாட்டுகளை தான் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
எனினும், இவ்விசாரணைகளால் ஒன்றும் நடக்கப் போவதில்லையெனவும் நேரமே வீண் விரயாமாகும் எனவும் கம்மன்பில மேலும் தெரிவிக்கிறார். அவர் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ரிசாத் பதியுதீன் அல்லது இரு முன்னாள் ஆளுனர்களுக்கு எதிராக எவ்விதமான தீவிரவாத குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படவில்லையென்பதையே அனுமானிக்க முடிகிறது.
தமக்கெதிராக தீவிரவாத குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை விசாரிக்க இடமளிக்கும் வகையிலேயே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இரு ஆளுனர்கள் மற்றும் 9 அமைச்சு மட்ட பதவிகள் வகித்தவர்கள் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment