ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றதற்கு மறு தினம், ஏப்ரல் 22ம் திகதி அப்போதைய கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்த நபர்களை சந்தித்ததன் பின்னணி குறித்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடாத்தியுள்ளது பயங்கரவாத தடுப்பு பிரிவு.
குறித்த சந்திப்பு சந்தேகத்துக்கிடமானது என ஞானசார தெரிவித்திருந்த நிலையில் இன்று இவ்விசாரணை இடம்பெற்றிருந்தது.
காலை 9.45 அளவில் ஹிஸ்புல்லா விசாரணைக்காக சமூகமளித்திருந்த நிலையில் மாலை 5.45 ன் பின்னரே அங்கிருந்து வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
உண்மை சொன்னால் எங்கட முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கும் சரியான நேரத்தில் சரியான பதிலை சொல்ல தெரியாது அந்த isis விடயத்தில்.isis என்ற இயக்கம் இலங்கையில் மட்டும் குண்டு வைத்து தாக்கப்பட்டதல்ல அது உலகலவியில் முஸ்லிம்களுக்கு எதிராகவே நிறைய தாக்குதல்களும் அழிவுகளும் ஏட்படுத்தி இருக்கின்றன உதாரணமாக ஈராக்,ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான்,சிரியா,எகிப்து,சோமாலிய.லிபிய மற்றும் நிறைய ஆப்பிரிக்கா நாடுகளில் முஸ்லிம்களே அதிகளவில் பாதிப்படைந்து இருக்கிறார்கள் அப்படி இருக்க எங்கள் முஸ்லீம் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும் எப்படி நாங்கள் அவர்களுக்கு துணைபோக வேண்டுமென்று??
Post a Comment