நேற்றைய தினம் தெஹிவளையில் கொலையான அப்துல் அசீஸ் சுபியான் என அறியப்படும் 60 வயது வர்த்தகரின் ஜனாஸா நல்லடக்கம், ஐந்து மணியளவில் தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியில் இடம்பெறவுள்ளது.
பிரேத பரிசோதனை முடிந்து சற்று முன்னரே உடல் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து மணியளவில் ஜனாஸா தொழுகையையடுத்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் சோனகர்.கொம்முக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
வர்த்தக நிலையத்துக்குள் நுழைந்து கப்பம் கோரிய முகம் மூடிய வகையிலான ஹெல்மட் அணிந்திருந்த நபரே இக்கொலையைச் செய்துள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.
-Nasmeer
No comments:
Post a Comment