தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தது உட்பட 25 முறைப்பாடுகளை தமது தரப்பு ரிசாத் பதியுதீனுக்கு எதிராக பொலிசில் கையளிக்கவுள்ளதாக திவயினவுக்கு தகவல் வழங்கியுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.
கடந்த வருடம் ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தின் போது ரிசாத் பதியுதீனை மஹிந்த அணியில் இணைப்பதற்கு எஸ்.பி. திசாநாயக்கவே முயன்று தோல்வி கண்டிருந்த நிலையில் தற்போது தீவிரவாதத்துக்கு ஆதரவளித்து உதவியதாக ரிசாதுக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு வரை ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, ரிசாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்பதற்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவிடம் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக மூன்று முறைப்பாடுகளும் அசாத் சாலிக்கு எதிராக ஒரு முறைப்பாடும் கையளிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment