நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்து, பதவிக்காலத்தை குறைத்து புரட்சி செய்யப் போவதாக சொல்லிக் கொண்டு பதவியேற்ற மைத்ரிபால சிறிசேன தற்போது 19ம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என புதிய நாடகத்தை ஆரம்பித்துள்ளதாக சாடியுள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.
அவரும் விரும்பியே 19ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது இதைப் பேற்றி பேசாத அளவுக்கு அவர் உறங்கிக்கொண்டிருந்தாரா? என கேள்வியெழுப்பியுள்ள பொன்சேகா, தேர்தல் நெருங்குவதால் மைத்ரிபால புதிய நாடகமொன்றை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கிறார்.
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை முற்றாகக் கைது செய்து விட்டதாக முன்னர் அறிவித்த அரசு, தொடர்ந்தும் இந்தியா - ரஷ்ய புலனாய்வுப் பிரிவுகளின் உதவியோடு இயங்கி வருகிறது. இதையே தான் முன்னரே எதிர்வு கூறியதுடன் இப்பிரச்சினையிலிருந்து நாடு மீள இரண்டு வருடங்களாவது செல்லும் என தெரிவித்திருந்ததாகவும் பொன்சேகா சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment