19ம் திருத்தச் சட்டம் நாட்டில் உறுதியான அரசை உருவாக்குவதற்குத் தடையாக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை வரவேற்றுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
மஹிந்த ராஜபக்ச வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்கும் திட்டத்தின் பின்னணியில் உருவான 18ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கும் வகையில் 19ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்றைய தினம் இவ்விரு திருத்தச் சட்டங்களுக்கும் எதிராக மைத்ரிபால சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, 18 பற்றி பேசத்தேவையில்லை ஏனெனில் அதற்கு மைத்ரியும் தான் ஆதரவளித்தார் என தெரிவிக்கும் மஹிந்த, 19ம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment