நாளை மதியம் 12 மணிக்கு முன்பாக இரு முஸ்லிம் ஆளுனர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை பதவி விலக்க வேண்டும் என காலக்கெடு விதித்து உண்ணாவிரதம் இருக்கும் ரதன தேரருடன் இணைந்துள்ளார் ஞானசார.
தலதா மாளிகை முன்பாக குறித்த மூவரையும் பதவி நீக்க வேண்டும் எனக் கோரி கடந்த மூன்று தினங்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாக தெரிவிக்கும் ரதன தேரரை அங்கு பார்க்கச் சென்ற நிலையிலேயே ஞானசார இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஞானசார தற்போது பாரிய அளவில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment