பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் ஜுன் 7ம் திகதியுடன் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மே.
பிரெக்சிட் கருத்துக்கணிப்பின் பின், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதற்கு மக்களை சம்மதிக்க வைக்க முடியாத நிலையில் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகியிருந்தார். அச்சூழ்நிலையிலேயே பிரதமர் பதவியை தெரேசா மே பொறுப்பேற்றிருந்தார்.
ஆயினும், தொடர்ச்சியாக பிரெக்சிட் திட்டம் ஒன்றை முன் வைத்து நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெற முடியாத நிலையில் தற்போது அவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment