முஸ்லிம்களின் பிறப்பு வீதத்தை கட்டுப்படுத்துங்கள்: SLPPக்கு தேரர் அறிவுரை - sonakar.com

Post Top Ad

Sunday, 19 May 2019

முஸ்லிம்களின் பிறப்பு வீதத்தை கட்டுப்படுத்துங்கள்: SLPPக்கு தேரர் அறிவுரை



இலங்கையில் பௌத்த குடும்பங்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம் குடும்பங்களில் பிறப்பு வீதம் அதிகமாக இருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பெரமுன அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பவித்ரா வன்னியாராச்சி ஊடாக அறிவுரை வழங்கியுள்ளார் லண்டன், ஹவுன்ஸ்லோவில் கடந்த 40 வருடங்களாக குடியிருப்பதாக தெரிவிக்கும் கடும்போக்குவாத தேரர்.



நேற்றிரவு (18) லண்டனில் பவித்ரா வன்னியாராச்சி தமது கட்சி உறுப்பினர்களுடன் நடாத்திய சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்ததுடன் சராசரியாக முஸ்லிம் குடும்பம் ஒன்றில் ஆறு குழந்தைகள் பிறப்பதாகவும் அதுவே பௌத்த குடும்பத்தில் 1.5 அளவே இருப்பதாகவும் தெரிவித்ததுடன் பௌத்த நாடாகாக இருந்த ஆப்கனிஸ்தான் நாளடைவில் முஸ்லிம் நாடாக மாறியது போல இலங்கையும் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய கோட்டாபே ஊடாக இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கருத்துரைக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் இக்கருத்தினை வன்மையாகக் கண்டித்த முஸ்லிம் சமூக ஊடகவியலாளர், ஒரு சமூகத்தின் பிறப்பு வீதம் குறைவதற்கு இன்னொரு சமூகம் எப்படிப் பொறுப்பாக முடியும் என பதில் கேள்வி எழுப்பியதோடு, மத்திய கிழக்கிற்கு சென்றால் அங்கு அந்த அரசின் சட்டப்படியே வெளிநாட்டவர் வாழ வேண்டும் என்பது போல இலங்கையில் முஸ்லிம்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லையெனவும், இலங்கைக்கு முஸ்லிம்கள் தொழில் செய்ய வரவில்லை, மாறாக நாம் இலங்கையிலேயே பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் இலங்கையர் என்ற மரியாதையைப் பெறத் தகுதியானவர்கள் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் போது கருத்துரைத்த பவித்ரா, குறித்த தேரரின் கருத்து கட்சியின் நிலைப்பாடில்லையென தெரிவித்த போதிலும், இலங்கையிலும் - வெளிநாடுகளிலும் சிறுபான்மையின மக்கள் விரோதிகள் பொதுஜன பெரமுனவையே தெரிவு செய்து இணைந்து கொள்வதன் சூட்சுமம் என்ன? எனவும் வினவப்பட்ட போது அதற்கு பதிலின்றி தவித்திருந்தார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொதுஜன பெரமுன பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்ததை தமிழ் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்  சுட்டிக்காட்டியதுடன், சிறுபான்மை சமூகங்களை அரவணைக்கும் வகையிலான செயற்பாடுகள் எதையும் காண முடியவில்லையெனவும் சலிப்பை வெளியிட்டிருந்தார்.



குறித்த சந்திப்பில் அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் 40 வருடங்களாகக் குடியிருப்பதாக தெரிவித்த குறித்த பௌத்த துறவி இனவாதத்துடன் பேசியமை இன ஐக்கியத்தை விரும்பியோரை முகம் சுளிக்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Ghouse said...

Sri Lanka racists all around the world...

Post a Comment