தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் கொழும்பு ஒருங்கிணைப்பாளர் என கருதப்படும் வாழைத்தோட்டம் பவாசின் விளக்கமறியல் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த இடங்களுக்குச் சென்று தனது மொபைலில் அவற்றைப் பதிவு செய்துள்ள பவாஸ் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நிமித்தம் பவாசை தடுத்து வைக்க அனுமதி கோரப்பட்டுள்ள அதேவேளை இரு தற்கொலைதாரிகளுடன் பவாஸ் எடுத்துக் கொண்ட படம் ஒன்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் இப்ராஹிம் சகோதரர்கள் ஒன்றிணைந்து நடாத்திய தாக்குதல்களையடுத்து நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பாரிய கெடுபிடிகளுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment