இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்களை நடாத்திய சஹ்ரான் கும்பலின் இரு அமைப்புகளான தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்து இரு வாரங்கள் கடந்தும் இன்னும் அதற்கான சுற்று நிருபம் வெளியிடப்படாமலுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈஸ்டர் தின தாக்குதல்களையடுத்து குறித்த இரு அமைப்புகளும் தடை செய்யப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் எனும் அமைப்பு இலங்கையில் இதற்கு முன் அறியப்படாத அமைப்பாகவிருந்த போதிலும் சஹ்ரான் குழுவும் - மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்பில் ஈடுபட்ட குழுவும் இவ்வாறு இரு வேறு பெயர்களில் இணைந்திருந்ததாக நம்பப்படுகிறது.
எனினும், சுற்று நிருபம் தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருகின்றமை குறித்து அவதானிகள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment