சஹ்ரான் குழுவின் தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரை விடுவிக்க ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 5 லட்ச ரூபா லஞ்சப் பேரம் பேசி, அதில் 250,000 ரூபா கொடுக்க முனைந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாமலிருக்கவே குறித்த தொகை லஞ்சம் பேரம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு முற்பணம் கொடுக்க முனைந்த நிலையில் கைதான நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment