நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் அச்ச சூழ்நிலையைப் போக்கி நிலவரத்தை சுமுகமாக்குவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலையீட்டைக் கோருவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியெடுப்பதாக அறியமுடிகிறது.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் வருடாந்தம் திட்டமிட்ட வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில், இம்முறை ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பாதித்திருப்பதுடன் மௌனித்து அச்சுற வைத்துள்ளது.
பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகளின் வீடுகளும் பொலிசாரால் சோதனையிடப்பட்டிருந்த நிலையில் அமைதியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது ஒவ்வொருவராக 'பேச' ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment