![](https://i.imgur.com/0u1cgqQ.jpg?1)
தொடர்கதையாக நீடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தரமான பாதுகாப்பும் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியதோடு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்பின்றி சாதாரண குற்றத்துடன் சந்தேகத்தின் பேரில பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற குழுவினரால் பிரதமரிடம் முன் வைத்த கோரிக்கைக்கு இணங்க உயர் பாதுகாப்பு அதிகாரிகள் விடுத்த பணிப்புரையின்படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குற்றமற்றவர்களுடைய தகவல்களை முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சுக்கு தகவல்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அதேவேளையில் அரபு மத்ரசாக்கள் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டாலும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்படும் எனவும அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
அனைத்து நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் சகிதம் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போது அதில் கலந்து கொண்ட பொலிஸ் மாஅதிபர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கைது விடயமாகச் சுட்டிக் காட்டிய போது குற்றமற்றவர்களுடைய தகவலைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த வேண்டு கோளை விடுத்துள்ளதாக அமைச்சர் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சிறு சிறு குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக அந்தந்த பொலிஸ் பிரிவு, கைது செய்யப்பட்ட திகதி, முழுப்பெயர் , குற்றம் என்ன, பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களா அல்லது படை வீரர்களால் கைது செய்யப்பட்டவர்களா , வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை, வழக்குச் செல்லும் நீதி மன்றம் உள்ளிட்ட முழு விபரங்களையும் எழுத்து மூலம் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் இணைப்புச் செயலாளர் பீ. ஏ. சீ. ஏம். ரமீம் அவர்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை இன்று முஸ்லிம்களின் பாதுகாப்பு உத்தரவாத நிலையின்றி உள்ளனர். முஸ்லிம் சமூகம் பாதுகாப்பு கெடிபிடி காரணமாகவும் இனவாத வன்முறை காரணமாகவும் நாளுக்கு நாள் உளவியல் ரீதியாக பெரும் அவஸ்தையை எதிர்நோக்கி வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகமானதாக பல வேண்டுகோளை முன் வைத்ததாக அமைச்சர் தெரிவித்தார். அரபு மத்ரசாக்கள் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டாலும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்படும். பௌத்த சமய பிரிவினா கல்வி கல்வி அமைச்சின் கீழே முன்னெடுக்கப்படுகின்றன. அரபு மத்ரசாக்கள் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு செயற்பட்டாலும் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் ஒருங்கிணைந்தே செயற்படவுள்ளது.
முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் இணைப்புச் செயலாளர் பீ. ஏ. சீ. ஏம். ரமீம். தோலை பேசி இலக்கம் 0777840844 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களையும் தகவல்களையும் அனுப்பி வைக்குமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment