நாட்டில் வன்முறைகள் தலைவிரித்தாடியபோது மைத்ரிபால சிறிசேன சர்வதேசம் எங்கும் சொல்லித் திரியும் அளவுக்கு பதவிகளை அள்ளியெடுத்து கொண்டாடி வந்த முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தற்போது வன்முறைகள் ஓய்ந்துள்ள நிலையில் ஆறுதல் சொல்லச் செல்வதற்கு போட்டி போடுவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த மூன்று தினங்களாக செய்வதறியாகது திகைத்துப் போயிருந்த பெருந்தகைகள், தற்போது ஜனாசா வீட்டு விஜயம், பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடும் விஜயம் போன்றவற்றில் ஈடுபட்டு, ஆங்காங்கு ஆறுதல் சொல்லும் விஜயங்களையும் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, இழப்பீட்டைப் பெற்றுத்தரப் போவதற்கான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment