ISISக்கு தேவைப்பட்டது இலங்கையில் நடந்தேறியுள்ளது: SITE நிறுவனர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 May 2019

ISISக்கு தேவைப்பட்டது இலங்கையில் நடந்தேறியுள்ளது: SITE நிறுவனர்


ஐ.எஸ். அமைப்புக்கு தேவைப்பட்டது இலங்கையில் நடந்தேறியுள்ளதாக, அண்மைய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்து தகவல் தெரிவித்துள்ளார் ஐ.எஸ். அமைப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து சர்வதேச ஊடகங்களுக்கு தகவல் வழங்கும் சைட் அமைப்பின் நிறுவனர் ரீட்டா கட்ஸ்.

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டி ரீட்டா இவ்வாறு ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை உலகுக்கு அறியப்படுத்தும் அமைப்பாக இயங்கும் சைட் நிறுவனத்தின் தகவல்கள் சர்வதேச அளவில் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றமையும் சஹ்ரான் கும்பலின் உத்தியோகபூர்வ ஐ.எஸ். படங்களை இவ்வமைப்பே வெளியிட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment