சிலாபம், குருநாகல், குளியாபிட்டிய, மினுவங்கொட உட்பட பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டோரை குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனை (ICCPR) யின் கீழ் குற்றஞ்சாட்ட உத்தரவிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
குளியாபிட்டிய பகுதியில் பாதிப்புகளை நேரில் சென்று பார்த்து வந்த அவர், வெசக் கொண்டாட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கரிசணையுடன் பேசியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இவ்வுத்தரவை வழங்கியதோடு அடுத்ததாக இழப்பீட்டு அறிவிப்பொன்று எதிர்பார்க்கப்படுகின்றமையும் திகன வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கல் நிறைவடையவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment