பாகிஸ்தானின், சிறு கிராமம் ஒன்றில் மர்மமான முறையில் குழந்தைகள் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாகி வரும் சூழ்நிலை அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களுக்குள் இதுவரை 15 குழந்தைகள் இவ்வாறு எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாகியுள்ள அதேவேளை பெற்றோர் யாரும் பாதிப்பற்றவர்கள் என்ற அடிப்படையில் மர்மம் நீடிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ரட்டோடெரோ என்ற கிராமமே தற்போது இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ள அதேவேளை சிந்த் மாநிலத்தில் இதற்கு முன்னர் 2016ம் ஆண்டில் 1500 பேரளவில் இவ்வாறு திடீரென எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment