கருத்தடை, சிசேரியன் குற்றச்சாட்டு பிரச்சாரங்களின் பின்னணியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குருநாகல வைத்தியரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளருமான ஷாபி தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர் தொடர்பில் சங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இங்கு ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஷாபி வேறு தொழிலிலும் ஈடுபட்டு வந்ததன் ஊடாக அவருக்கு வேறும் வருமானம் இருந்ததாக அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளமையும், கருத்தடை பிரச்சாரங்கள் முன்னுக்குப் பின் முரணானவையாக இருக்கின்ற போதிலும் தற்சமய் இரு பெண்கள் தாம் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிசில் முறையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment