கடந்த வருடம் ஒக்டோபர் முதல் இவ்வருடம் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 3 பில்லியன் போலி கணக்குகளைக் கண்டறிந்து மூடியுள்ளதாக தெரிவிக்கிறது பேஸ்புக் நிறுவனம்.
அத்துடன் சுமார் 70 மில்லியன் வெறுப்பூட்டும் பதிவுகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், பேஸ்புக் ஊடாக துப்பாக்கிகள், போதைப்பொருள் விற்பனைக்கான பதிவுகளும் பாரிய அளவில் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்தும் பெருமளவு போலி கணக்குகள் மூலம் தனி நபர் பழிவாங்கல்கள், அரசியல் ஆதரவு பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment