குருநாகல மருத்துவரும் ரிசாத் பதியுதீனின் கட்சி சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டவருமான மருத்துவர் ஷாபிக்கு எதிராக முறைப்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினையடுத்து நேற்றிரவு வரை 116 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே கைதான மருத்துவருக்கு எதிராக சட்டவிரோத கருத்தடை குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே 116 பேர் குருநாகல வைத்தியசாலையில் முறையிட முன் வந்துள்ளமையும் தற்போது பேராதெனியவிலும் இவ்வாறு ஒரு முஸ்லிம் மருத்துவர் செயற்பட்டிருப்பதாக எஸ்.பி. திசாநாயக்க புதிய குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment