இரத்தினபுரி, கிரியல்ல பகுதியில் தம்மை புலனாய்வுப் பிரிவினர் என கூறி உள்நுழைந்து கொள்ளையிட முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இராணுவ சோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் சூழ்நிலையைப் பயன்படுத்தி இவ்வாறு கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒருவர் விசாரணை நடாத்திக்கொண்டிருப்பது போல் பாவனை செய்ய ஏனைய மூவர் இவ்வாறு தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக அகலவத்தை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ததுடன் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment