நீர்கொழும்பு தற்கொலைத் தாக்குதலை நடாத்திய ஹஸ்தும் எனும் நபரின் மனைவியாகக் கருதப்படும் புலஸ்தினி மகேந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட சாரா கடத்திக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளது பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய அமைப்பு.
புலஸ்தினிக்கு இவ்வாறு கட்டாயத் திருமணம் செய்து வைத்தது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்கி பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டு வந்த அப்துல் ராசிக் எனும் நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புலஸ்தினியின் தாயார் வெளியிட்ட தகவலையடுத்து தற்போது சி.டி.ஜே எனும் பெயரில் இயங்கும் அமைப்பின் செயலாளராக இருக்கும் ராசிக்குக்கு புலஸ்தினியும் - ஹஸ்துமும் ஏலவே அறிமுகமானவர்கள் எனும் தகவல் உறுதியாகியிருந்தமையும், குறித்த நபர்கள் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும், புலஸ்தினி தானாக விரும்பியே இஸ்லாத்தைத் தழுவியதாகவும், பின்னர் வெளியேறி விட்டதாகவும் ராசிக் தரப்பு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment