ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல்தாரியினால் நடாத்தப்பட்டு வந்த செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நபர் ஒருவரின் விளக்கமறியல் இம்மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாஹ் என அறியப்படும் குறித்த நபர் தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஏனைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கியது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் அதிகாரி நீதிபதிக்கு எதிராக முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment