பத்து வருட அமைதியைக் குழப்பி, பயங்கரவாதம் மீளெழுந்து நாட்டை சீரழித்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளார் கோட்டாபே ராஜபக்ச.
பயங்கரவாதம் மீண்டும் தலையெடுத்துள்ளதால் 2009 யுத்த வெற்றியின் 10 வருட நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்வுகள் கூட இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் ஈஸ்டர் தாக்குதலைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
யுத்த நிறைவின் 10 வருட நிறைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment