திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் தமிழ் - முஸ்லிம் சமூகத்திற்குச் சொந்தமான 3725 ஏக்கர் காணி, அப்பகுதியின் பௌத்த துறவியொருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்.
புல்மோட்டை பகுதியில் நீண்ட காலமாக சிறுபான்மையினங்களுடன் முறுகலை ஏற்படுத்தி இவ்வாறு காணி அபகரிப்பினை குறித்த துறவி செய்து வருவதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
பரம்பரை பரம்பரையாக தமிழ் - முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து காணிகளைக் கூட தொல்பொருட் திணைக்களத்துக்குரியதாக தெரிவித்து இவ்வாறு அபகரிப்புகள் இடம்பெறுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளமையும் குறித்த பகுதியில் அவ்வப்போது சர்ச்சைகள் உருவாவதும், அரசியல் தலையீட்டில் தற்காலிகமாக தணிவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment