பௌத்தர்களின் 'தர்ம' சக்கரத்தின் உருவப்படம் (போன்ற அடையாளம்) பொறித்த ஆடை அணிந்து வீதியில் சென்றதாக பெண்ணொருவர் நேற்றைய தினம் (18) ஹசலக பொலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
47 வயது முஸ்லிம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, இனங்களுக்கிடையே முறுகலைத் தோற்றுவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டாரா என பொலிசார் 'விசாரணை' நடாத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண்ணை 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலின் சக்கர வடிவம் கொண்ட இவ்வகை ஆடைகள் பெருமளவில் (இதுவரை) விற்பனையாகியுள்ள போதிலும் தற்போதைய சூழ்நிலையில் அது தர்ம சக்கரம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment