சஹ்ரான் கும்பலுக்கு உதவியதாகவும், நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கண்டி, அலவத்துகொடயைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகலில் வைத்தே வார இறுதியில் இக்கைது இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபர் நாடாளுமன்ற ஹன்சார்ட் பிரிவில் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த நபர் முறையான தகுதியையும் வழிமுறையையும் பின்பற்றாது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் அரச பணியில் இணைந்துள்ளதாகவும் விசாரணையின் பின் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றமையும் குறித்த நபரை 90 நாட்கள் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment