ஈஸ்டர் தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில். பாடசாலைகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன.
எனினும், மாணவர் வரவு வெகுவாகக் குறைந்திருந்ததாக கல்வியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான இடங்களில் தொடர்ந்தும் சிறிதளவு அச்சம் காணப்படுவதோடு பொதுமக்கள் பெருமளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இதேவேளை, பாதுகாப்பு படையினரின் சோதனை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஊதிப் பெருப்பித்து, முஸ்லிம்கள் தொடர்பில் பாரிய சந்தேக உணர்வை இனவாத ஊடகங்கள் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment