ஈஸ்டர் தாக்குதல்தாரிகளான தெமட்டகொட இப்ராஹிம் சகோதரர்களுள் ஒருவரால் நடாத்தப்பட்டு வந்த செப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய ஒன்பது ஊழியர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த நபர்களுக்குப் பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் சந்தேகநபர்களை அவ்வாறு விடுவித்ததன் பின்னணி குறித்து ஆராய்வதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
ஏலவே, ஹொரவபொத்தான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க லஞ்சம் கொடுக்க முனைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment