மினுவங்கொடயில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழுங்கு செய்து, வழி நடாத்தியது ஒரு அரசியல்வாதியென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த குறித்த அரசியல் வாதி மே மாதம் 9ம் திகதி முதலே அப்பகுதியில் நோட்டமிட்டு வந்துள்ளதுடன் தேவையான அளவு ஆட் சேர்ப்பிலும் ஈடுபட்டுள்ளதாகவும் எனினும் அவர் மினுவங்கொடயைச் சேர்ந்தவரில்லையெனவும் சம்பவத்தின் போது அங்கு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரும் தாக்குதலில் நேரடியாகக் கலந்து கொண்டுள்ளதோடு அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment