டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மதுஷ், போலி கடவுச்சீட்டொன்றிலேயே இலங்கை வந்தடைந்துள்ளமை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்சித எனும் இயற்பெயர் கொண்ட மாகந்துரே மதுஷ், கம்பஹாவில் பிறந்த, அஜித் எரங்க வர்ணகுலசூரிய எனும் பெயரில் 2015 ஏப்ரல் மாதம் 30ம் திகதி பெறப்பட்ட கடவுச்சீட்டில் வந்திறங்கியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலவே பல கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் விவகாரங்களில் மதுஷ் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment