மாவனல்லை, ஹெம்மாத்தகம பகுதியிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான இராணுவ சீருடைத்துணி மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஆடைத் தொழிற்சாலையொன்றை நடாத்தி வரும் 61 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்தே குறித்த தொகை சீருடைத் துணிகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பௌத்த துறவிகளின் காவியுடை மற்றும் உபகரணங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் நபர்களும் பலபிட்டியவில் இவ்வாரம் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அங்கு ஐந்து சாக்குப் பைகளில் காவித் துணிகள் மீட்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தமையும் பெருமளவும் முஸ்லிம்கள் இவ்வாறான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment